குறள்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
குறள் விளக்கம்
வீட்டிலிருந்து மனைவியுடன் வாழ்பவன் எனப்படுபவன் நல்ல வழியில் செல்லும் தன்மையை உடைய மாணவன், தவம் செய்வோர், மெய்யுணர்ந்த துறவி ஆகிய மூவருக்கும் உறுதியாக நிலைத்து நின்று உதவி புரியக் கடமைப்பட்டவன்.