குறள்
செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
குறள் விளக்கம்
வாழ்க்கையின் தன்மையை உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக நன்கு ஆராய்ந்து பார்த்தால் (மனிதனால்) ஒருவனுக்கு, உறுதியுடன் கடைப்பிடிக்கப்பட வேண்டியது புண்ணியமே என்பது விளங்கும். நன்கு ஆராய்ந்து பார்த்தால் நிச்சயமாக விடவேண்டியது, பெரியோர்களால் பழிக்கப்படும் பாபச் செயல்களே ஆகும்.