Kural

திருக்குறள் #42
குறள்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
குறள் விளக்கம்
வீட்டிலிருந்து மனைவியுடன் வாழ்பவன் எனப்படுபவன் அறவழியில் நெறிமுறைப்படி துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கும், ஏழ்மை நிலையிலும் அறநெறி வாழ்வைக் கடைப்பிடிப்பவர்களுக்கும், பிறர் ஆதரவின்றித் தன்பால் அடைக்கலம் புகுந்து இறந்தவர்களுக்கும் அல்லது முன்னோர்களுக்கும் உதவி புரியக் கடமைப்பட்டவன்.
குறள் விளக்கம் - ஒலி