குறள்
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்து
கற்றார் அனைத்திலர் பாடு
குறள் விளக்கம்
கற்காதவர், மேலானதாகக் கருதப்படும் குடியில் பிறந்தவராக இருந்தாலும், கீழானதாகக் கருதப்படும் குடியில் பிறந்த கற்றவரின் பெருமைக்கு நிகரான பெருமை உடையவராக மாட்டார்.