குறள்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
குறள் விளக்கம்
மனித உடலில் வாழும் உயிர்க்கு தான் படித்த படிப்பானது ஏழு பிறப்பிலும் உயிர் உடல்களை மாற்றிக் கொண்டாலும் தொடர்ந்து அறிவு, அமைதி, இன்பத்தைத் தந்து உதவிப் பாதுகாக்கும் தன்மை உடையதாகும்.