குறள்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
குறள் விளக்கம்
நுண்மையான நூல்களைக் கற்று அறிந்தவரின் செயல்கள் எப்படி இருக்குமென்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சியை நங்கு கொடுத்து, இனி இவரை எப்போது பார்ப்போமே? என்று நினைக்கும்படிச் செய்து நீங்குகின்ற தன்மையுடையதாகும்.