Kural

திருக்குறள் #388
குறள்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்
குறள் விளக்கம்
வகுத்த சட்டங்களின் வழி நடந்து, சட்டப்படி வாழுகின்ற மக்களுக்குத் துன்பம் நேராமல் பாதுகாத்தலையும் செய்கின்ற அரசன் மனித வடிவில் தோன்றினாலும், நெறிப்படி வாழுகின்ற மக்களுக்கு, செயலின் தன்மையைக் கொண்டு கடவுளாகக் கருதி உயர்வாக வைத்துப் போற்றப்படுவான்.