குறள்
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை;
யாண்டும் அஃதுஒப்பது இல்
குறள் விளக்கம்
எதற்கும் ஆசைப்படாதிருக்கும் தன்மைக்கு நிகரான ஒப்புயர்வற்ற செல்வம், காணப்படும் இவ்வுலகில் இல்லை; கேள்விப்படும் அவ்வுலகத்திலும் இல்லை (விண்ணுலகத்திலும்) ஆசையில்லாத தன்மையாகிய அந்த ஒப்புயர்வற்ற செல்வத்திற்கு நிகரானது இல்லவே இல்லை.