Kural

திருக்குறள் #361
குறள்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து
குறள் விளக்கம்
அனைத்துயிர்களுக்கும் எப்பொழுதும் அழியாது தொடர்ந்து வருகின்ற பிறவியை (பல்வேறு உடல்களில் மாறி மாறிப் புகுந்து துன்பங்களை நுகர்தலை)த் தோற்றுவிக்கும் விதை (காரணம்) அறியாமையில் ஆழ்த்தும் ஆசை என மெய்யறிவாளர் பகர்வர்.