குறள்
இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
குறள் விளக்கம்
தவத்தை மேற்கொண்டவர்களுக்கு ஒன்றும் (ஒரு பொருளும்) இல்லாமலிருப்பது இயல்பாகி விடவேண்டும். ஏதேனும் ஒருபொருளை உடையவராயிருந்தாலும் (அது) தவத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல் துன்பத்திற்குக் காரணமான அறியாமையில் ஆழ்த்திவிடும்.