குறள்
மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற
குறள் விளக்கம்
எல்லா நற்செயல்களும் மனதில் உள்ள விருப்பு, வெறுப்பு முதலிய அழுக்குகள் இல்லாமல் ஆவதற்காகவே செய்யப்பட வேண்டும். அத்தகைய நோக்கம் இல்லாமல் புலனின்பம், பதவி, புகழ் ஆகியவற்றுக்காகச் செய்யப்படும் மற்ற செயல்கள் அனைத்துமே துன்பத்தைத் தரும் தன்மை படைத்ததாகும்.