குறள்
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
குறள் விளக்கம்
எது புல்லியதன்மை என்று ஆராய்ந்து அறிபவர் உள்ளத்தில் கொலைச் செயல்புரிபவராகிய, பிற உயிரின் உணர்ச்சியினைப் பகுத்தறியும் ஆற்றலும் உணர்ச்சியுமற்ற விலங்குக்கொப்பான மனிதர் புலைத் தொழிலினராய்த் தோன்றுவார்.