குறள்
தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
குறள் விளக்கம்
தனது உயிரை வேறொரு உயிர் தனது உடலிலிருந்து நீக்க முற்பட்டாலும் தான் (தன் உடலை நீக்க முற்படும்) தனக்கு வேறான உடலில் வாழும் உயிரை அதன் உடலிலிருந்து நீக்கும் செயலைச் செய்யாமலிருக்க வேண்டும்.