Kural

திருக்குறள் #320
குறள்
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
குறள் விளக்கம்
துன்பம் அனைத்தும் துன்பத்தைக் கொடுத்தவரையே சேரும். துன்பமின்மையை விரும்புபவர் பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யமாட்டார்.