குறள்
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்
குறள் விளக்கம்
ஒருவன் தன்மீது பகையுணர்வு கொண்டு துன்புறுத்தலைச் செய்தபோதிலும் அதற்கு மாறாக தானும் அவனுக்குத் துன்புறுத்தலைச் செய்யாமலிருப்பதுதான் மனமாசற்ற பெரியோர்களது உறுதியான கொள்கையாகும்.