Kural

திருக்குறள் #266
குறள்
தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு
குறள் விளக்கம்
தவத்தை மேற்கொள்பவரே தனது உயிருக்கு உறுதிப்பயனைத் தரும் செயற்கரிய செயல்களைச் செய்தவர் ஆவார். புலனின்பப் பொருட்களுக்காக உழைக்கும் மற்றவர்கள் (அறியாமையால் நிலையற்ற இன்பப் பொருள்) விருப்பங்களுக்கு அடிமைப்பட்டு (தன்னுயிர்க்குத் தானே) கெடுதலைச் செய்து கொண்டவர் ஆவார்.
குறள் விளக்கம் - ஒலி