Kural

திருக்குறள் #253
குறள்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
குறள் விளக்கம்
ஓர் உயிரின் உடலை சுவைத்து உண்பவரின் உள்ளம் கொலைக்கருவியை கொண்டிருப்பவருடைய (இரக்கமற்ற) நெஞ்சத்தைப் போல அருளாகிய இரக்கப் பண்பைப் பற்றி ஊக்கத்துடன் சிந்திக்காது.