Kural

திருக்குறள் #251
குறள்
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
குறள் விளக்கம்
தனது உடலை வளர்ப்பதற்காக தான் (ஒருவன்) வேறோர் உயிரின் உடம்பைத் தின்பவன் எப்படி அருளை (இரக்கப்பண்பை) ஆள இயலும் (கடைப்பிடிக்க முடியும்?).