Kural

திருக்குறள் #245
குறள்
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி
குறள் விளக்கம்
அருட்பண்பால் உள்ளத்தை ஆள்பவருக்கு (யாண்டும், எங்கும்) துயரமே இருக்காது. (இதற்கு) காற்று உலாவுகின்ற வளம் மிக்க மிகப்பெரிய இம்மண்ணில் (வாழ்கின்ற) (அருளாளர்களே) தக்க சான்று.