Kural

திருக்குறள் #24
குறள்
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து
குறள் விளக்கம்
திட்பம் மிக்க அறிவு என்கின்ற அங்குசத்தினால், மனதைச் சார்ந்து இயங்குகின்ற ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகளையும் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துபவன் உயர்ந்ததாகக் கருதப்படுகின்ற பேரின்பத்திற்கு சிறந்த காரணமாய் விளங்குகிறான்.