குறள்
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி
குறள் விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செல்லும் ஆசையினை கட்டுப்படுத்தியவனது வல்லமைக்கு பரந்த வானுலகத்திலுள்ள தேவர்களுடைய தலைவனாகிய தேவேந்திரனே பொருத்தமான சான்று.