Kural

திருக்குறள் #231
குறள்
ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
குறள் விளக்கம்
அறிவாற்றல் எனும் சிறப்புத்தன்மை கொண்ட மனித உடலில் வாழும் உயிருக்கு (ஜீவனுக்கு), மனிதப் பிறவியின் சிறந்த பயன் பொருளில்லாதவர்க்கு மனமுவந்து பொருளை வழங்குதல், அறநெறிப்படி வாழ்வாங்கு வாழ்தல், அல்லாமல் வேறு பயன் இல்லை.