குறள்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
குறள் விளக்கம்
புண்ணியத்தை விரும்பும் மனிதன் பொருள் அற்றவர்களுடைய (உடல்நலம், மனநலம், அறிவுநலம் அனைத்தையும்) அழிக்கும் (ஆற்றல் மிக்க) பசிப்பிணியினை நீக்கக் கடமைப்பட்டவன். அப்புண்ணியம் பொருளைப் பெற்றவனுக்கு பொருளை அழியாவண்ணம் பாதுகாக்கும் இடமாகும்.