குறள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
குறள் விளக்கம்
ஒருவன் மற்றவனுக்கு துன்பம் தரும் தீயசெயல்களை நன்மை, தீமை இவற்றைப் பகுத்து ஆராயும் விழிப்புணர்வு இல்லாமல் மறந்தும்கூட எண்ணக்கூடாது. (மறந்து) எண்ணுவானேயானால் அவ்வாறு நன்மையால் வரும் இன்பத்தையும், தீமையால் வரும் துன்பத்தையும் கருதாமல் எண்ணுபவனுக்கு, தீய செயல்களுக்கான துன்பப் பயனை, வினைப் பயனை உயிர்கள் நுகரச் செய்கின்ற அறக்கடவுள், தருவதற்கான காலத்தைத் திட்டமிடுவார்.