குறள்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
குறள் விளக்கம்
(துவக்கத்தில் இன்பம் தருபவை போலத் தோன்றும்) தீய செயல்கள் (பிறகு) துன்பத்தையே தருவதால் (தனக்கும் பிறருக்கும் துன்பத்தையே தருகின்ற) அத்தீயசெயல்களுக்கு நெருப்பிடம் பயப்படுவதைக் காட்டிலும் (தீ உடலைத்தான் வருத்தும்; தீவினையோ உயிரைப் பல பிறவிகளுக்கு வருத்தும் என்று உணர்ந்து) பயப்பட வேண்டும்.