Kural

திருக்குறள் #175
குறள்
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
குறள் விளக்கம்
பிறர் பொருளைக் கவர விரும்பி எவரிடத்திலும் (மேன்மக்கள்-கீழ்மக்கள்) அறிவுக்குப் பொருந்தாத தீய செயல்களை செய்வார்களேயானால் நுட்பமான பற்பல நூல்களையும் ஆராய்ந்த அறிவுடைமையானது யாது பயனைத் தரும்? (கற்ற அறிவு பயனற்றதே என்பது கருத்து).
குறள் விளக்கம் - ஒலி