Kural

திருக்குறள் #166
குறள்
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
குறள் விளக்கம்
ஒருவன் மற்றவர்களுக்கு கொடுக்கும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய உறவினர் உடையும் உணவும் இல்லாமல் அழிந்துபோவர் (துன்பப்படுவர்).
குறள் விளக்கம் - ஒலி