குறள்
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று
குறள் விளக்கம்
செய்யத்தகாத தீய செயல்களை தனக்கு மற்றவர் செய்தாலும் அதனால் உண்டாகும் துன்பத்தினால் வருத்தப்பட்டு, அறமல்லாத செயல்களை துன்பம் தந்தவர் பொருட்டு செய்யாதிருத்தல் ஒருவனுக்குச் சிறந்த அறமாகும்.