குறள்
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
குறள் விளக்கம்
நாட்டில் வாழும் நற்குடிமக்களுக்கு உரிய பொருளாக இருக்க வேண்டியது ஒழுக்கமேயாகும். ஒழுக்கத்தை விட்டு விலகுவது பெறுதற்கரிய மனிதப் பிறவியைக் கெடுத்ததாக ஆகிவிடும். (பிறவியை இழிவுபடுத்தியதாக ஆகிவிடும்.)