Kural

திருக்குறள் #1057
குறள்
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்
உள்ளுள் உடைப்பது உடைத்து
குறள் விளக்கம்
(தன்னை) அவமதித்து இழிவாகப் பேசாமல் பொருளை வழங்குபவரைக் கண்டால் பெறுபவரின் மனமானது, மகிழ்ச்சி அடைந்து தனக்குள்ளேயே மலர்ச்சிபெறும் தன்மையை உடையதாகும்.