Kural

திருக்குறள் #1053
குறள்
கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து
குறள் விளக்கம்
ஒளிவு மறைவு இல்லாத் நெஞ்சத்துடன் கூடிய கடமையுணர்ச்சி மிக்கவரின் முன்னால் நின்று இரந்து கேட்டலும் ஓர் அழகை உடையதாகும்.