Kural

திருக்குறள் #1039
குறள்
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
குறள் விளக்கம்
நிலத்திற்கு உரியவர்ன் நாள்தோறும் நிலத்திற்குச் சென்று வேண்டியதைச் செய்யாமல் இருந்தால் அந்நிலமானது அவனது மனைவியைப் போன்று தன்னுள் வெறுத்துப் (பின்) அவனோடு பிணங்கிவிடும்.