Kural

திருக்குறள் #1030
குறள்
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும்
நல்ஆள் இலாத குடி
குறள் விளக்கம்
அருகே நின்று தாங்கிக் காப்பாற்றக்கூடிய நல்ல ஆண்மகன் இல்லாத குடியாகிய மரமானது, துன்பமாகிய கோடாரியானது அடியில் வெட்டிச் சாய்த்தால் பற்றிக்கொள்ள ஏதுமின்றி விழுந்துவிடும்.