குறள்
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
குறள் விளக்கம்
தான் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து பல குணங்களாலும் நிறைந்து, அவற்றை ஆளும் தன்மையை உடையவர், உலகில் செய்ய வேண்டிய அனைத்தையும் இயல்பாகச் செய்வார்கள் என்று நூலோர் கூறுவர்.