குறள்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
குறள் விளக்கம்
தன்னிடத்து வந்த விருந்தினர்க்கு உணவு, நீர் முதலியன அளித்து (மகிழ்வித்து அன்புடன் வழியனுப்பி) வருகின்ற விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவன் (மறுபிறப்பில் தேவர்களுள் ஒருவனாய்) விண்ணுலகில் இருக்கும் தேவர்களின் சிறந்த விருந்தினன் ஆவான். (பேரன்புக்குரியவனாய் விளங்குவான்).