குறள்
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
குறள் விளக்கம்
பழி ஏற்படும் செயல்கள் என்று அறநூல்களால் கண்டித்து விலக்கப்பட்ட செயல்களைத் தாமும் அதைக் கண்டித்து விலக்கி விடாமல் பொருளுக்காகச் செய்பவர்களுக்கு அச்செயல்கள் தீயவை என்பதால் முடிவு பெறாது. ஒருவேளை முடிவு பெற்றாலும் அச்செயல்களால் துன்பமே உண்டாகும்.