Kural

திருக்குறள் #630
குறள்
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
குறள் விளக்கம்
(ஒருவன் செயல்புரியும்போது) முயற்சியால் வரும் துன்பத்தையே (தனக்கு) இன்பமாக நினைத்துக் கொள்வானாயின் (அதனால்) (அவன்) தன் பகைவர்களும் நன்மதிப்பதற்குக் காரணமாகிய மேன்மை உருவாகும்.