Kural

திருக்குறள் #629
குறள்
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்
குறள் விளக்கம்
(ஊழ்வினையால் தனக்கு) இன்பம் வந்தவிடத்து, அவ்வின்பத்தை (அனுபவித்துக்கொண்டே மனத்தால்) விரும்பாதவன் (இன்ப துன்பங்களைப் பற்றிய அறிவை இழக்காதவன்), (ஊழ்வினையால்) தனக்குத் துன்பம் வந்தவிடத்து அத்துன்பத்தை, (அனுபவித்துக் கொண்டே மனத்தால்) இன்ப துன்பங்களைப் பற்றிய தெளிந்த அறிவால் வருந்த மாட்டான்.