Kural

திருக்குறள் #625
குறள்
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்
குறள் விளக்கம்
துன்பத்திற்குமேல் துன்பம் தொடர்ந்து வந்தாலும் அறிவையும் ஊக்கத்தையும் விடாதவனை வந்து அடைகின்ற துன்பங்களுக்கு அதிகத்துன்பம் உண்டாகும்.