Kural

திருக்குறள் #469
குறள்
நன்றுஆற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
குறள் விளக்கம்
அவரவர்களுடைய பண்புகளை (குணங்களை) ஆராய்ந்து அறிந்து செய்யவில்லையானால் நன்மையைச் செய்வதிலும் பிழை உண்டாகும்.