குறள்
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
குறள் விளக்கம்
பிறர் பொருளை தனதாக்கிக் கொள்ளப் பழகியவருக்கு அவரது உயிர் தங்கியுள்ள உடலும் துன்பத்தைக் கொடுத்து (உயிரை) வெளியேற்றிவிடும். பிறர்பொருளைக் கவர விரும்பாதவரை (தொலைவிலுள்ள) விண்ணுலகத்தினர் தள்ளிவிடாமல் (தங்களுடன் வாழ வைத்து இன்புறுவர்).