குறள்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
குறள் விளக்கம்
இம்மண்ணுலகில் உள்ள சாஸ்த்ரங்கள் (மக்களின் நல்வாழ்வுக்குரிய அறத்தைக் கூறும் அறிவு நூல்கள்) உள்ளத்தின் தூய நிறைவிலிருந்து தோன்றுகின்ற சொற்களையுடைய சீரிய சிந்தனையாளர்களாகிய மக்களின் (துறவிகளின்) சிறப்பினை உணர்த்தியே தீரும்.