குறள்
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
குறள் விளக்கம்
இகழ் இன்றி வாழுகின்றவர்களே (பிறவியின் பயனை உணர்ந்து) வாழ்பவர்கள். புகழ் இன்றி வாழுகின்றவர்களே (மனிதப் பிறவியின் சிறப்பை) அழித்தவர்களாவர், (உயிருடன் இருந்தாலும்) இறந்ததற்கு நிகராவர்.