Kural

திருக்குறள் #233
குறள்
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்
குறள் விளக்கம்
ஈடிணையற்ற மேலான (அறவாழ்க்கையின் விளைவாகிய) புகழைத்தவிர இவ்வுலகத்தில் அழியாமல் நிலைத்திருப்பது வேறொன்றும் இல்லை.