Kural

திருக்குறள் #20
குறள்
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
குறள் விளக்கம்
உணவை உண்டுபண்ணித் தானும் உணவாக விளங்கும் நீர் இல்லாமல் எந்த உயிர்க்கும் உலக வாழ்க்கை நடைபெறாது என்பதுபோல மக்களிடம் ஒழுக்கமானது இல்லையெனில் வான்மழை பொழியாது என்பதையும் உணர வேண்டும்.