Kural

திருக்குறள் #19
குறள்
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்
குறள் விளக்கம்
அகன்ற இவ்வுலகத்தில் மழையானது பெய்யவில்லை என்றால் தானம் என்ற இல்வாழ்க்கையும், தவம் என்ற துறவு வாழ்க்கையும் ஆகிய இரண்டு வாழ்க்கை முறையும் சீராக இயங்காது.