குறள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
குறள் விளக்கம்
எத்தகைய பெரிய அறங்களை அழித்தவர்களுக்கும் (அப்பாவங்ககளிலிருந்து நீங்கும் வழிமுறையானது) கழுவாய் நெறிகள் இருக்கின்றன. ஆனால் ஒருவன் தனக்குச் செய்த நன்மையை (மறந்து) கெடுத்த மனிதனுக்கு (அப்பாவத்திலிருந்து நீங்கும் வழிமுறையான) கழுவாய் நெறி கிடையாது.