குறள்
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
குறள் விளக்கம்
(நமக்கு முன்பு நன்மை செய்தவர் பின்பு) கொல்வதைப் போன்ற வெறுக்கத்தக்கதைச் செய்தாலும், அவரால் செய்யப்பட்ட நன்மை ஒன்றை எண்ணிப் பார்த்தால், அவர் செய்த தீமைகள் அனைத்தும் இல்லாததாகிவிடும்.