குறள்
உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
குறள் விளக்கம்
ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் உதவியானது அவ்வுதவியின் அளவிற்கு (காரணம், காலம், பொருள்) உட்பட்டதன்று. அவ்வுதவியைப் பெற்றுக் கொண்டவரது தகுதியைப் (மகிழ்ச்சியைப்) பொறுத்ததாகும்.