குறள்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
குறள் விளக்கம்
எல்லோருக்கும் இன்பம் தரும் இனிமையான சொற்கள் தன்னிடம் இருக்கும்பொழுது எல்லோருக்கும் துன்பம் தரும் கடுமையான சொற்களைக் கூறுவது என்பது தன்னிடம் இனிய பழங்கள் இருக்கும்போது அவைகளை உண்ணாமல் (இன்னாத) காய்களை உண்பது போல ஆகும்.